எடையைக் குறைக்க எளிய மருந்து
முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கால்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் கனமான வெள்ளைத் தண்டை நீக்கி சாப்பிடுவது நல்லது .
இது பச்சையாக உண்ண ஏற்ற ஒரு கீரையாகும். இலேசாக வேகவைத்தும் சாப்பிடலாம். இது எளிதில் சீரணமடையும்
நீரிழிவு நோய் கட்டுப்பட
நீரிழிவு நோயால் அதிக மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தினமும் அவதியுறவைக்கும் நோய்களில் இதுவும் ஒன்று.
இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். முட்டைக் கோஸை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி பின் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். இதனை வேகவைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
இரத்தம் சுத்தமடைய
உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைவதால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்க ஆரம்பிக்கும். சிறுநீரகம், இதயம், இரத்தக் குழாய் போன்றவை அதிகம் பாதிக்கப்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலு கொடுக்க கோஸ் சிறந்த மருந்தாகும்.
வாரத்தில் இருமுறையாவது கோஸ் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் சுத்தமடையும். மேலைநாடுகளில் தினமும் உணவில் கோøஸ சேர்த்துக் கொள்வார்கள்.
சீரண சக்தியைத் தூண்ட
இன்றைய உணவு முறைகள் எளிதில் சீரண மாகாதவை. இதனால் அசீரணக் கோளாறு ஏற்பட்டு வாயுக்கள் சீற்றமாகி உடலில் பல உபாதைகளை உருவாக்குகிறது. முட்டைகோசுக்கு சீரண சக்தி அதிகம் உண்டு. தினமும் உணவில் கோஸ் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறை நீக்கி சீரண சக்தியைத் தூண்டும்.
மலச்சிக்கலைப் போக்க
முட்டைகோசுடன் சிறிது சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
ஜலதோஷம் நீங்க
தற்போது கோடைக் காலம் ஆரம்பிக்கும்நேரம். இந்த காலங்களில் பனியின் வேகமும் அதிகம் காணப்படும். இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஜலதோஷம் போன்ற தொல்லைகளை உண்டாக்கும். சில சமயங்களில் சளியுடன் வறட்டு இருமலையும் உண்டாக்கும். இதற்கு முட்டைகோஸை பொரித்தோ, கூட்டு செய்தோ உணவில் அடிக்கடி சேர்த்துவந்தால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பித்த நோய்கள் குணமாக
உடலில் இனம்புரியாத நோய்கள் ஏற்படுவதற்கு பித்த மாறுபாடே காரணம். உடலில் பித்த நீர் அதிகம் சுரந்து அவை பல இன்னல்களை உண்டாக்கும். முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் சீரான நிலையில் இருக்கும்.
தாது பலப்பட
தாது இழப்பால் சிலர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இவர்கள் தினமும் முட்டைகோஸை வேகவைத்து வடிகட்டிய நீரை காலை மாலை என இருவேளையும் அருந்திவந்தால் தாது பலப்படும்.
உடல் இளைக்க
சிலர் அதிக உடல் எடையால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் முட்டைகோøஸ சூப் செய்து அருந்திவந்தால் பருத்த உடல் இளைக்கும். உடலுக்கு பலம் தரும்.
No comments:
Post a Comment