Saturday, January 26, 2013

சிக்கன் பிரியாணி (எளிய முறை)

 

 

சிக்கன் பிரியாணி (எளிய முறை)

 

தேவையானப் பொருட்கள்:

  • பிரியாணி அரிசி – 500 கிராம்
  • சிக்கன் – 500 கிராம்
  • நெய் – 75 கிராம்
  • எண்ணெய் – 100 கிராம்
  • இஞ்சிஒரு அங்குலத் துண்டு
  • பூண்டு – 6 பல்
  • பல்லாரி – 2
  • தக்காளி – 3
  • மிளகுப்பொடி – 10 கிராம்
  • சீரகப்பொடி – 10 கிராம்
  • மஞ்சப்பொடிஅரை தேக்கரண்டி
  • கலர் பவுடர்இரண்டு சிட்டிகை
  • கசகசா – 2 தேக்கரண்டி
  • முந்திரி – 10
  • தேங்காய்பால் – 250 கிராம்
  • பட்டை கிராம்புஒரு தேக்கரண்டி அரைத்தது
  • மிளகாய்ப்பொடிஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலைகொஞ்சம்
  • கொத்தமல்லிகொஞ்சம்

செய்முறை:

  • முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • வடிக்க போகும்முன் கலர் பவுடர், முந்திரி இரண்டையும் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
  • அதன் பிறகு நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  • பிறகு கோழிக்கறியை போட்டு, 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
  • பிறகு தேங்காய் பால் 250 மில்லி தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
  • இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் தீயைக் குறைத்து மூடி வைத்து வேக விடவும்.
  • பிறகு எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

 

புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது மஞ்சள்!

மஞ்சளை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தை சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது.

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக இருபது ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூட்டுவலியை குறைப்பதில் மஞ்சள் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் புற்றுநோய், நீரிழிவு நோய், சரும நோய் போன்றவற்றிலிருந்தும் மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப்பங்கு வகிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி செய்து விடுகிறது.

மஞ்சளை அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால் இப்போது மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும் சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும்.

மஞ்சளை சேர்த்துக் கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது, மாறாக உணவுப் பொருளுக்கு நிறத்தை அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி, அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம் என மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியுள்ளார்.

தைப்பூசத் திருநாள்

தைப்பூசத் திருநாள் முருகனுக்கு சிறப்பானதாகும். முருகப்பெருமான் சேனாதிபதியாக நின்று தேவர்களுக்காக அசுரர்களை அழித்தார். தைப்பூசத் தினத்தன்று அவர் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

*
சிவபெருமான் பார்வதியுடன், சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள்.

*
தேவர்களின் குருவான, பிரகஸ்பதியின் ஜென்ம நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு சிறப்பு வாய்ந்தது.

*
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைப்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார்.

*
புத்தர் ஞானோதயம் பெற்று, இமயமலையில் இருந்தபோது ஈழநாட்டைப் பற்றி நினைத்ததும் இந்த நாளில்தான் என்று கூறப்படுகிறது.

தைப்பூசத் திருநாள் என்பது சிவன், அம்பிகை மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூசம் என்பது நடராஜர் சிவகாமியம் மைக்கு உரிய சிறப்பான நாள் ஆகும். சிவனின் அம்சமே முருகப்பெருமான் என்பதால் இந்த தைப்பூசத் திருநாள் முருகருக்கும் உகந்த தினமாக மாறிப்போனது. அன்றைய தினம் முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.

 

 

பக்தர்கள் பலர் மாலை போட்டுக் கொள்வார்கள். மேலும் பலர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பவுர்ணமியுடன் கூடிய தைப்பூசத் திருநாள் என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதனால் தான் இந்த தைப்பூசத் தினம் நடராஜர், அம்பிகை, முருகப்பெருமான் ஆகியோருக்கு உகந்த நன்னாளாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் தைப்பூசத் திருநாள் அன்று இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.

 

 

ஆனந்த தாண்டவம்......

 

 

தைப்பூசம் என்பது தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர திருநாளை குறிக்கும். தை என்ற வாக்கியமானது பல பொருள்படும். தைப்பது, தாளத்தின் ஒரு சொல், மகர ராசி, பூச நாள் என்பன அவற்றில் சில. பவுர்ணமியுடன் கூடிய தைப்பூசத் திருநாள் அன்று தை த தை என்ற தாள லயத்துக்கு ஏற்ற வகையில் அம்பிகையுடன் சேர்ந்து, நடராஜபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார்.

 

 

ஆடல் அரசனின் அந்த அருள்தரும் ஆனந்த தாண்டவத்தை வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகிய மூர்த்திகள், மூவாயிரவர், தேவர்கள், அடியார்கள் உள்ளிட்ட பலரும் கண்டு பேருவகை அடைந்தனர். பின்னர் ஒவ்வொரு தைப்பூசத் திருநாளிலும், அனைத்து ஆன்மாக்களுக்கும் அருள் செய்யும் வகையில், எக்காலமும் ஆனந்த நடனத்தை நடத்தியருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன் பொருட்டு சிவபெருமானும் உடன்பட்டார்.

 

 

தெப்ப உற்சவம்.........

 

 

அப்போது சிவபெருமான் கூறியபடி, பொன்னினால் ஆன மகாசபை ஒன்றை தேவர்கள் செய்வித்தார்கள். சிவபெருமான் அன்று முதல் தேவர்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் சிவகாமியோடு தன்னையும், தன் நடனத்தையும் எக்காலமும் தரிசிக்கும் வகையில் கனகசபையிலே தரிசனம் தந்து அருள் செய்து கொண்டுள்ளார்.

 

 

தைப்பூசத் திருநாள் அன்று தெப்ப உற்சவம் நடைபெறுவதற்கான காரணம் ஒன்று கூறப்படுகிறது. தேவர்களின் குருவான பிரகஸ்பதி (வியாழ பகவான்) பிறந்த ஜென்ம நட்சத்திரம், பூச நட்சத்திரம் ஆகும். இதற்கு காற்குளம் என்ற பெயரும் உண்டு. கால்+ குளம் என்பதே காற்குளமாயிற்று. இதன் காரணமாகவே தைப்பூசத் திருநாள் அன்று கோவில் தெப்பக்குளங்களில் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.

 

 

தைப்பூசத் திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜை செய்ய வேண்டும். காலை கோவில்களுக்கு சென்று வழிபாடு முடித்து விட்டு வந்து பின்னர் காலை உணவு உண்ண வேண்டும். மாலையில் பால், பழங்களை சாப்பிட்டு, முருகனுடைய பாடல்களை பாடியபடி இருக்க வேண்டும். முறைப்படி இந்த விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நினைத்த காரியம் கைகூடும்.

 

 

விரத முறை........

 

 

தைப்பூசத் திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜை செய்ய வேண்டும். காலை கோவில்களுக்கு சென்று வழிபாடு முடித்து விட்டு வந்து பின்னர் காலை உணவு உண்ண வேண்டும். மாலையில் பால், பழங்களை சாப்பிட்டு, முருகனுடைய பாடல்களை பாடியபடி இருக்க வேண்டும். முறைப்படி இந்த விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நினைத்த காரியம் கைகூடும்

 

 

நகங்கள் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல; அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்களை பார்ப்போம்!

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு, நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது, நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமி தொற்று ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை வெட்டி விடலாம். சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை, நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து, நகங்களை மிருதுவாக வைத்திருக்கும். சமையலறை, கழிவறைகளில், பிளீச்சிங் பவுடர் மற்றும் அம்மோனியா போன்ற ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது, கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களை பாதுகாக்கலாம். தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும், கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது. பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும். ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால், நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.
நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் எனும் உடற்கழிவு தான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ், நகத்தின் இதயப் பகுதியாகும். இது தான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள். ஆனால், அது உண்மை தான்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட், கழிவுப் பொருள் என்பதால், அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால், உட்புறம் இருக்கும் மேட் ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்சிஜன் அவசியம்.
எனவே, அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கியூடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது. நகத்தில், 18 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள், நம் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி போலவும் செயல் படும். உடல்நலம் பாதிக்கப் பட்டால், நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றை கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் இதோ...

*
நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்னை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.
*
நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால், உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதை கவனிக்காவிட்டால், நுரையீரலில் நோய்கள் வரலாம்.
*
மங்கலான நீண்ட கோடுகள் தென் பட்டால், மூட்டுவலி ஏற்படும்.
*
நகங்கள் வெளிறி இருந்தால், ரத்த சோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.
*
நீலநிறமாக மாறிவிட்டால், ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இதன் அறிகுறி, ஆஸ்துமா, இதயநோய்.
*
நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கறுமை நிறமாக காணப்பட்டால், இரும்புச் சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.
*
மஞ்சள் நிறம் தென் பட்டால், கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.

 

 

சருமம் நன்கு வெள்ளையாக வேண்டுமா..? இவற்றை சாப்பிடுங்கள்..!

 

 

அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும்.

அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும்.

எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கேரட்

கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும்.

தக்காளி

இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்.

கிவி

இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் வெண்மையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அதனை முகத்திற்கு தடவும் போது, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்றவை நீங்கிவிடும்.

பீட்ரூட்

இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காக போடலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.

ஸ்ட்ராபெர்ரி

இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இதனை சாப்பிட்டால், இதன் நிறத்தை பெறலாம்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

டீ

டீ வகைகளில் கிரீன் டீயில் சருமத்திற்கான நன்மைகள் பல அடங்கியுள்ளன. இதனை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள செல்கள் மென்மையாவதோடு, தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

மஞ்சள் நிற குடைமிளகாய்

இந்த வகையான குடைமிளகாயில் வைட்டமின் சி இருப்பதோடு, சிலிகா இருப்பதால், இவற்றை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமம் நன்கு பொலிவோடு மின்னும்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்களில் ஜிங்க் மற்றுட் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக, சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.

ப்ராக்கோலி

இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், அவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது.

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வெள்ளையாகி, அழகாகிவிடும். அதுமட்டுமின்றி, இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும்.

 

 

பழைய சோறு எப்படி செய்வது?

 

பழைய சோறு எப்படி செய்வது?

பழைய சோற்றின் மகத்துவத்தைப் பற்றி சில

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சோற்றை குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு, உடல் எடையும் குறையும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சோறு எப்படி செய்வது?

பழைய சோற்றிற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சோற்றை போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சோற்றை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சோற்றில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

என்ன பழம் சோறு உண்ண தயாரா?

 

 

 

மொறு மொறு முந்திரி ப்ரை செய்வது எப்படி..?

மொறு மொறு முந்திரி ப்ரை செய்வது எப்படி..?

நட்ஸ் உ நட்ஸ் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய நட்ஸில் முந்திரி பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும். எனவே மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது முந்திரியை ப்ரை செய்து சாப்பிடலாம். அந்த முந்திரி ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா

தேவையான பொருட்கள்:

முந்திரி – 1 கப்

கடலை மாவு – 1/2 கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன் (விரும்பினால்)

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் முந்திரியை முழுமையாகவோ அல்லது இரண்டாகவோ உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான முந்திரி ப்ரை ரெடி.

 

 

டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த கார்ன் மசாலா சாதம் செய்வது எப்படி?

 

டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த ஒரு கலவை சாதம் என்று சொன்னால், அது கார்ன் மசாலா சாதம் தான். இந்த சாதத்தில் கொழுப்புகள் குறைவாக இருக்கும். இப்போது அந்த சாதத்தின் செய்முறையைப் பார்ப்போமா

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கப்

சோள மணிகள் – 1 கப்

பச்சை பட்டாணி – 1/2கப்

முந்திரி – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 1/2 டீஸ்பூன்

கிராம்பு – 2

பட்டை – 1

சீரகம் – 1/2 டீஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசியை நன்கு கழுவி போட்டு, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம், சோள மணிகளை சூடான நீரில் 4-6 நிமிடம் ஊற வைத்து, நீரை வடித்துக் கொள்ள வேண்டும். அதேப் போன்று பச்சை பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ள வேண்டும். குக்கர் விசில் வந்ததும், அதில் உள்ள கேஸ் போன பின், சாதத்தை எடுத்து, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, சீரகம், கிராம்பு, பட்டை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு அதில் பச்சை பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து, கிளற வேண்டும். அடுத்து குளிர வைத்துள்ள சாத்தை போட்டு, முந்திரி மற்றும் ஊற வைத்துள்ள சோள மணிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான கார்ன் மசாலா சாதம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ஏதேனும் குழம்பு அல்லது தக்காளி கெட்சப் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

குறிப்பு: காரம் அதிகம் வேண்டுமென்பவர்கள், இதோடு கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

 

 

ஜிமெயில் லேப்ஸ்

 

 

கூகுளின் ஜிமெயில் தரும் ஏராளமான பயனுள்ள வசதிகளில் ஒன்று ஜிமெயில் லேப்ஸ்(Gmail Labs). இவற்றை சோதனையில் இருக்கும் வசதிகள் என்று சொல்லலாம். இவை ஜிமெயில்க்காக சோதனை அடிப்படையில் உருவாக்கியது, உங்கள் வேலைகளை எளிதாக்க உதவும் இவற்றை பற்றி பார்ப்போம் இன்று.

Gmail Labs என்றால் என்ன?

ஜிமெயில் தன்னுள்ளேயே ஏராளமான வசதிகளை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு எந்த வகையில் பிரச்சினை வராதவாறு அமைத்து இருக்கும். ஆனால் ஜிமெயில் Labs என்பது Testing இல் இருப்பவை, பல Labs பயனுள்ள வசதிகளை தரும் போதும், சிலவற்றை பலர் விரும்பாமல் போகலாம். அம்மாதிரியான வசதிகளை பயனர் மீது திணிக்காமல், விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பதற்கு உருவாக்கப்பட்டது.

இவற்றின் செயல்பாட்டை பொறுத்து குறிப்பிட்ட Lab ஜிமெயில் Feature ஆக சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும். இது பயன்படுத்துபவர்களின் Feedback பொறுத்தது.

எப்படி பயன்படுத்துவது ?

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து, Settings >> Labs என்ற பகுதிக்கு வாருங்கள்.

இந்த பகுதியில் உள்ளவை தான் Labs வசதிகள். உங்களுக்கு பிடித்தமானவற்றில் Enable என்பதை கிளிக் செய்தால் அந்த வசதி உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

அதிகம் பயன்படுத்தப்படும் Gmail Labs

நிறைய Labs இருந்தாலும் கீழே உள்ள சில நிறைய பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Undo Send

இதன் மூலம் அனுப்பிய மெயிலை உடனே Cancel செய்து ஏதேனும் தவறு இருந்தால் திருத்தலாம். அதிகபட்சம் 30 நொடிகள் வரை இதை Enable செய்ய முடியும்.

Authentication icon for verified senders

Paypal, eBay என்ற இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல்களுக்கு ஒரு Key Icon கொடுத்து அவை Spam இல்லை உண்மையானவை என்று உங்களுக்கு தெரிவிக்க பயன்படும் வசதி. இதன் மூலம் இந்த இரண்டு தளங்களில் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

Right-side chat

மிக அதிகம் பேர் சாட்டில் இருந்தால் ஆன்லைனில் உள்ள எல்லோரையும் நம்மால் பார்க்க முடியாது. Chat பகுதியை Right Side க்கு மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம். அதற்கு உதவும் வசதி இது.

SMS (text messaging) in Chat

குறிப்பிட்ட நண்பரின் பெயருடன் மொபைல் எண்ணை சேர்த்து SMS அனுப்ப உதவும் வசதி.

Unread message icon

எவ்வளவு மின்னஞ்சல்கள் இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது என்பதை காட்டும் வசதி. இதன் மூலம் வேறு Tab – இல் இயங்கி கொண்டிருந்தால், புதிய மெயில் வரும்போது உடனடியாக கவனிக்கலாம்.

இவை தவிர இன்னும் பல வசதிகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான வசதியை மட்டும் பயன்படுத்துங்கள், எல்லாவற்றையும் பயன்படுத்த முயல வேண்டாம். இதனால் ஏதேனும் ஒரு Lab நீக்கப்பட்டால் உங்கள் இன்பாக்ஸ் Load ஆவதில் பிரச்சினை வரும். தேவையானதை மட்டும் பயன்படுத்தினால் எளிதாக குறிப்பிட்ட ஒன்றை நீக்கலாம், அதிகம் பயன்படுத்தினால் எதில் பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க முடியாது.

ஏதேனும் குறிப்பிட்ட Lab நீக்கப்பட்டு உங்கள் இன்பாக்ஸ் லோட் ஆவதில் பிரச்சினை வந்தால் https://mail.google.com/mail/u/0/?labs=0. என்ற முகவரியை பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து Lab – களையும் Disable செய்யும். பின்னர் Settings >> Labs பகுதியில் குறிப்பிட்ட Lab எது என்று கண்டுபிடித்து நீக்க வேண்டும்.

 

 

பெண்கள் பாதுகாப்பாக இருக்க 5 யோசனைகள்!

 

 

1. முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

2. ஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை ரொம்ப தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ஷாப்பிங் முடித்து விட்டு வர நேரமாகிவிட்டால் தனியாகச் சிறிது தூரம் நடந்து சென்று வாகனத்தை எடுக்க வேண்டும். அப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம்.

3. பொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.

4. இப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது.

அப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது.

அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும். காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.

5. பஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.

இப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு.

முட்டை

ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் டி உள்ளது.

முட்டையில் சரியான விகிதத்தில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஒரு முட்டையில் 5 கிராம் கொழுப்பு உள்ளது, அதில் 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் 300 மைக்ரோ கிராம் கொலைன் சத்து உள்ளது. இது மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயக் குழாய் செயல்பாடுகளுக்கு மிகவும் நல்லது.

முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வர, மார்பக புற்று நோய் வருவதை தடுக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முட்டையைப் பற்றி பல தவறான புரிதல்கள் இருந்து வருகின்றன. முட்டை சாப்பிடுவதற்கும் இதய நோய்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. தினமும் அளவாக முட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால், ஸ்ட்ரோக், ரத்த உறைவு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகுக்கும் முட்டை நல்ல பலன் தரும். முட்டையில் சல்பர் சத்து, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்…!

 

 

செல்போனில் உங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவரா நீங்கள்? அதிர்ச்சி காத்திருக்கிறது!

 

செல்போனில் உங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவரா நீங்கள்? அதிர்ச்சி காத்திருக்கிறது!

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… Very Sorry.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

அது எப்படிஎன் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?" என்று யோசிக்கிறீர்களாவெயிட்உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. 'செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு  Delete செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை  Delete செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோஎன ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில்  Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

"செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள்  Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர்  Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன  Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

 

 

 

ட்யூப்லெஸ் டயரில் பஞ்சர் போடுவதற்கான எளிய வழிமுறை!

 

 

வாகனங்களை பயன்படுத்தும்போது சின்ன சின்ன மெக்கானிக் வேலைகளை கைவசம் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், சில சமயம் நடுரோட்டில் படாத அவஸ்தை பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில், தற்போது ஹோண்டா ஆக்டிவா முதல் பல்சர் 200 வரை பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் ட்யூப்லெஸ் டயருடன்தான் வருகின்றன.

ட்யூப்லெஸ் டயர்கள் எளிதில் பஞ்சராகாது என்றாலும், பஞ்சரானாலும் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், ட்யூப்லெஸ் டயர்களில் பஞ்சர் போடுவது எளிதான விஷயம்தான். அதற்கான வழிமுறையை பார்க்கலாம்.

முதலில் ட்யூப்லெஸ் டயருக்கான பஞ்சர் கிட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். அனைத்து ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளிலும் தற்போது இது 200 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இந்த கிட்டில் கோணூசி போன்ற டூல் ஒன்றும் ரப்பர் நூலும் இருக்கும்.
டயர் பஞ்சராகும் சமயத்தில் டயரில் குத்தியிருக்கும் ஆணியை கொரடால் பிடுங்கி விடுங்கள். பின்னர், ஆணி குத்திய இடத்தில் உள்ள ஓட்டையை அந்த டூலால் பெரிதாக்குங்கள்.

தேவையான அளவு ரப்பர் நூலை கத்தரித்துக்கொண்டு டூலின் நுனியில் இருக்கும் ஓட்டையில் துணிதைக்கும் ஊசியில் நூலை கோர்ப்பது போன்று கோர்த்து சரிசமமாக இழுத்துக்கொள்ளுங்கள்.

பஞ்சரான ஓட்டையில் தற்போது நூலை போதுமான அளவு திணித்து விட்டு டயருக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் நூலை கத்தரித்து விடுங்கள். அவ்வளவுதான், இப்போது நீங்கள் வண்டியை கிளப்பி செல்லலாம். டயர் உருளும்போது ரப்பர் நூல் டயருடன் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.

ட்யூப்லெஸ் டயரில் பஞ்சரானாலும் காற்று உடனே இறங்காது என்பதால், இருக்கும் காற்றை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்லமுடியும்.

 

 

கூந்தலை நேராக்க வேண்டுமா..? இதை ட்ரை பண்ணுங்க!

 

 

 

பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும்.

இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை நேராக்க முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்

வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.

மூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு

ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.

தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.

நெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.

கண்டிசனர்

மற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.