Saturday, January 26, 2013

கூந்தலை நேராக்க வேண்டுமா..? இதை ட்ரை பண்ணுங்க!

 

 

 

பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும்.

இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை நேராக்க முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்

வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.

மூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு

ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.

தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.

நெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.

கண்டிசனர்

மற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.

 

 

No comments:

Post a Comment