Friday, August 22, 2014

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..

உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா..
காதைக் கிட்ட கொண்டு வாங்க!




இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும், எப்பேர்பட்டவர்கள் என்றும் சொல்வார்கள். உதாரணமாக, நாக்கில் மச்சம் இருந்தால், அவர்கள் நிறைய பொய் சொல்வார்கள் என்றும், எது சொன்னாலும் நடக்கும் என்று சொல்வார்கள்.


இதுப் போன்று நிறைய உள்ளன. இப்போது அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதிலும் எந்த இடத்தில் மச்சம் இருந்தால், எப்பேர்பட்டவர்கள், எப்படி இருப்பார்கள் என்பதையும் தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!


நெற்றியின் வலது பக்கத்தில் இருந்தால்


வலது பக்க நெற்றியில் மச்சம் இருந்தால், எப்போதும் செல்வ வளத்துடன் இருப்பார்கள் என்று அர்த்தம்.


நெற்றியின் இடது பக்கத்தில் இருந்தால்


வலது பக்கத்திற்கு அப்படியே எதிராக, மச்சமானது இடது பக்கத்தில் இருப்பவர்கள் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.


நெற்றியின் நடுவே இருந்தால்


நெற்றியின் நடுவில் இருந்தால், செல்வத்துடன், நல்ல புகழ் மிக்கவராக இருப்போம்.


தாடையில் இருந்தால்


மச்சமானது தாடையில் இருந்தால், எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள், எப்போதும் துணையுடன் சண்டை போடுவார்கள்.


வலது கண்ணுக்கு மேலே இருந்தால்...


வலது கண்ணுக்கு மேலே மச்சம் இருந்தால், வாழ்க்கை துணையிடம் இருந்து அதிகப்படியான அன்பை பெறுவார்கள்.


இடது கண்ணுக்கு மேலே இருந்தால்

மச்சமானது இடது கண்ணுக்கு மேலே இருந்தால், எதுவும் எளிதில் கிடைக்காது, போராடி தான் பெறுவார்கள்.


கன்னத்தில் மச்சம் இருந்தால்


கன்னத்தில் வலது பக்கத்தில் இருந்தால், நல்ல செல்வ வளத்துன் இருப்பார்கள். அதுவே இடது கன்னத்தில் இருந்தால், சற்று கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.


உதடுகளில் மச்சம் இருந்தால்


உதடுகளில் மச்சம் இருந்தால், அந்த விசயத்தில் (இரவு வாழ்க்கை) விஷயத்தில் வல்லவராக இருப்பார்கள் என்று அர்த்தம்.


காதுகளில் மச்சம் இருந்தால்


வலது காதில் மச்சம் இருந்தால், குறைந்த வாழ்நாள் உடையவர்கள் என்றும். இடது காதில் மச்சம் இருந்தால், விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் அர்த்தம்.


கழுத்தில் மச்சம் இருந்தால்


கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால், ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வார்கள் மற்றும் அவர்களின் வாழ்நாள் அதிகம்.


கையில் இருந்தால்


மச்சமானது வலது கையில் இருந்தால், எதையும் தைரியமாக கையாள்வதோடு, அனைவரையும் மதிப்பார்கள். அதுவே இடது கையில் மச்சம் இருந்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தம்.


மூக்கில் மச்சம் இருந்தால்...


மூக்கில் மச்சம் இருப்பவர்கள், வாழ்க்கையில் நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள்.


மச்சம் உள்ளங்கையில் இருந்தால்


வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களுக்கு, கையில் பணம் வந்து கொண்டே இருக்கும். அதுவே இடது உள்ளங்கையில் இருந்தால், அதிகப்படியான செலவை செய்வார்கள்.


கால்களில் இருந்தால்


கால்களில் மச்சம் இருந்தால், நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள்


புருவங்களுக்கு இடையே இருந்தால்


புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.


இடுப்பில் மச்சம் இருந்தால்


இடுப்பில் மச்சம் உள்ளவர்கள், அனைத்து செல்வங்களுடன், சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.


முதுகில் மச்சம் இருந்தால்


முதுகு பகுயில் மச்சம் இருப்பவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழ்வார்கள் மற்றும் மக்கள் உங்கள் பின்புறத்தில் கெட்டவிதமாக பேசுவார்கள்.


தொப்புள்


தொப்புளில் மச்சம் இருப்பவர்கள், அந்த விசயத்தில் (இரவு வாழ்க்கை) விஷயத்தில் வல்லவர்களாகவும், அதிகப்படியான குழந்தைகளை பெற்று வாழ்வார்கள்.


இடது தோள்பட்டை


இடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அதிகமாக தயக்கப்படுவதோடு, கோழையாக இருப்பார்கள்.


வலது தோள்பட்டை மச்சமானது


வலது தோள்பட்டையில் இருந்தால், தைரியமிக்கவராகவும், திறமை உள்ளவராகவும் இருப்பார்கள்.

No comments:

Post a Comment