அற்புத மூலிகை பூனை மீசை மூலிகையின் மருத்துவபயன் :-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் ,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தம் , சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .
இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இல்லாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம் , கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் ,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது .
இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் , மண்ணீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கிறது.
இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சர்க்கரைதேவை என்றால் சேர்த்துகொள்ளலாம் .
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும் .. சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது . தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்.
சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து ( கிட்னி பெயிலியர்க்கு )- பூனை மீசை மூலிகை !
பூனை மீசை -இந்த மூலிகையை எனக்கு மட்டுமில்லாது என்னை போல் உள்ள ஆயுர்வேத சித்த உலக்குக்கு அறிமுகப்படுத்திய பெருமை -எனது மானசீக குருவை சாரும் ..
எனக்கு தெரிந்த வகையில் எனது மானசீக குரு அவர்கள் -சொன்ன மாதிரி எந்த மூலிகையும் வேலை செய்யாது இருந்ததே இல்லை ..அவர் ஒரு மூலிகை புலி ,தாவரவியலில் எனக்கு தெரிந்த வகையில் விசய ஞானம் பெற்ற மனிதரை எனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை ..
அவர் இப்போது பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுனத்தின் தலைவராக பல மருத்துவர்களை வழி நடத்துகிறார் ..(அவரை பற்றிய -இந்த செய்தியை எழுத -நான் அவரிடம் அனுமதி பெற வில்லை )
நல்ல சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம் பெற்ற மாணவனும் -மூலிகை அறிவை வளர்த்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர் அவர் .. பூனை மீசை -என்ற இந்த -orthosiphon-என்ற தாவரவியல் பெயர் பெற்ற இந்த மூலிகையின் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த பெயர் வந்துள்ளது ..
இந்த பூனை மீசை என்ற மூலிகை பற்றி பழைய ஆயுர்வேத ,சித்த மூலிகை புத்தகங்களில் ஏதாவது குறிப்புகள் என்று தேடி கொண்டு இருக்கிறேன் இந்த பூனை மீசை -செடியின் காய்ந்த சமூலம் என்னும் மொத்த செடியின் காய்ந்த மூலிகை -நிச்சயமாக சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது
,இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது ..எல்லா சிறுநீரக செயல் இழப்புக்கு என்னும் சிறுநீரக செயல் இழப்புக்கும் இந்த அற்புத மூலிகை பயன்பட்டாலும் -ஒவ்வொரு மனிதருக்கும் அது வேலை செய்யும் விதம் மாறுபடுகிறது ..
கேரளா மண்ணில் அதுவும் குற்றாலம் முதல் புனலூர் செல்லும் பாதையில் உள்ள இந்த பூனை மீசை மூலிகையே நன்றாக சிறுநீரக செயல் இழப்புக்கு நோயின் தன்மையைக் குறைக்கின்றது.
குறிப்பு -இந்த மருந்தை வைத்து சிறுநீரக செயல் இழப்புக்கு குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது -என்றாலும் இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை வெகுவாக குறைக்க உதவுகிறது .இதன் மூலம் நோயின் வீரியத்தை குறைக்கலாம்.
No comments:
Post a Comment