வைட்டமின்களையும் குறைவின்றிப் பெறுவதற்கான பத்து கட்டளைகள்
தினந்தோறும், நம்முடைய உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் குறைவின்றிப் பெறுவதற்கான பத்து கட்டளைகள்:
1. உணவு பிரமிடை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள விகித்தின்படி சாப்பிட்டால், உடம்புக்கும் நல்லது, தேவையன வைட்டமின்களும் முழுமையாக கிடைக்கும்.
2. பொரும்பாலான வைட்டமின்கள், சமைக்கும்போது (அதிக சூட்டில்) அழிந்துவிடுகின்றன. ஆகவே, பச்சைக் காய்கறிகள், அரைவேக்காட்டில் சமைத்த உணவு வகைகளைச் சாப்பிடுவதில் நன்மை அதிகம்.
3. சமைத்த உணவானாலும்கூட, அதை உடனடியாக & 'ஃப்ரெஷ்' ஷாக உட்கொள்வது நல்லது.
4. காபி, டீ, ரசாயன குளிர்பானங்களைத் தவிர்ப்பது நலம். இந்த பானங்களில் வைட்டமின்கம் இல்லை. போதாக்குறைக்கு, இவற்றில் உள்ள காஃபின்,மற்ற உணவுப் பொருள்களில் உள்ள வைட்டமின்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனை பாதிக்கிறது. இவற்றுக்கு பதில், இயற்கையான பழரசங்களைக் குடிக்கலாம்.
5. புகைப்பழக்கம், குடிப்பழக்கம், அநேகமாக எல்லாம் வைட்டமின்களுக்கும் எதிரி.
6. காலை உணவில், கார்ன் ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸ் போன்றவற்றைச் சேர்ந்துக் கொள்வதன்மூலம், பல வைட்டமின்கள், தாதுப் பொருள்களைப் பெற முடியும். அவற்றில் தானியங்களும் கலந்திருந்தால் இன்னும் நல்லது.
7. மதியம், இரவு உணவில் குறைந்தபட்சம் இரண்டு காய்கறிகள் இருக்கவேண்டும்.
8. உணவுடன், அல்லது நொறுக்குத் தீனி நேரத்தில் நிறைய சால்ட் சாப்பிடுங்கள் (வெள்ளரி, தக்காளி, காரட், லெட்யூஸ்)
9. உணவு பலனளிக்காதபோது மட்டும்தான் வைட்டமின் மாத்திரைகளைத் தேடிப் போகலாம்.
10. அளவுக்கு அதிகமானால், வைட்டமினும் விஷம்தான். தினசரி எந்த வைட்டமினை அதிகபட்சம் எவ்வளவு உட்கொள்ளலாம் என்கிற கணக்கை எப்போதும் மறந்துவிட வேண்டாம்.
No comments:
Post a Comment