கால்வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன், பசுநெய் – 4 துளி, மஞ்சள்தூள் – 2 சிட்டிகை, 1 டீஸ்பூன் பயத்தம் மாவைச் கலந்து தினமும் தூங்கப்போகும் போது வெடிப்பு இருக்கும் பகுதியில் 10 நிமிடங்கள் தடவியபடி இருந்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். ஒரு வாரம் இதை தொடர்ந்து செய்து வந்தால் பாத வெடிப்பு சரியாகும்.
கடுகு எண்ணெயை சூடாக்கி பாதங்களில் தடவி பின்னர் இளஞ்சூடான நீரில் கால்களை வைத்திருக்கவும். தொடர்ச்சியாக செய்தால் பாத வெடிப்புகள் மறையும்.
கால்களை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை காலில் நன்றாக தடவி விட்டு பின்னர் அதன் மேல் கிளிசரினை தடவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு படிப்படியாக மறையும்.
சூடான வடிகஞ்சியில் காலை வைத்தும், சூடான அன்னத்தைச் சுடுகஞ்சி விட்டு அரைத்துக் அத்துடன் கற் சுண்ணமும் கலந்து சூடாகக் கால்வெடிப்பின் மேல் பூசி வந்தாலும் பாத வெடிப்பு நீங்கி, பாதம் தாமரை இதழைப் போல ஆகும்.
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
No comments:
Post a Comment